Wednesday, July 30, 2008

SDLC

SDLC

நாளும் பிறந்ததா? பறந்ததா? காலமில்லை, பார்க்கவில்லை - பாகம் பிரிவரிய
ஓட்டத்தின் நாயகர்கள் நாங்கள், நேரமில்லை - நலமறிய, நட்புற
இயல், இசையோ, நாடகமோ - ஏற்றவில்லை, இயக்க இயங்க
மாற்றத்தை செலுத்துபவர்கள் நாங்கள், மாறுவதில்லை மைந்தனின் மனம்


விந்தை வினோதம், நான் மனிதன் என்னை தொடரும்
அதை கொண்டு செலுத்தும் வேதம் - மென்பொருள் கருத்துயிர்க்கும்
அந்த வேதத்தின் வேகமும் பின் வேகமும் ஓட்டமும்
மூளையை கொய்திட , எங்கள் நாட்களும் கடக்கும்

கரு, உரு , உயிர் - என சக்கரம் சுழல
எங்கே என்ன எது, எனும் இடம் பொருள் மறந்திட
என்னை எனும் நொடி, அது தூக்கத்தில் உணர
கண்கள் விழித்தும் நிற்கும் எந்த நாளும் ஒரு போல


கோடையில் மழையுண்டு, மார்கழிபோல குளிருமுண்டு
அந்த தூரலில் தூக்கம், பின் தேநிர்க்கு திரைப்படம்
குளிரும் பொழுதில் மனதின் போக்கில் உறைவதும் உண்டு
வசந்தம் வந்தால் பருவக்கால பறவைகள் ஆவோம் நாங்கள்